தளபதியுடன் “வாரிசு” படத்தில் கூட்டணி போடும் முக்கிய பிரபலம்; யார் தெரியுமா?

தளபதி நடிக்கும் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

வழக்கமாக ஆக்ஷன் படமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி அருவதாகவும் வாரிசுபடம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி, நண்பன், மெர்சல் படங்களுக்கு பிறகு தளபதியுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment