அடுத்தடுத்து சொகுசு கார் விவகாரத்தில் சிக்கும் தளபதி! உயர் நீதிமன்றத்தில் வழக்கு;
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவிற்கு உயர்ந்து காணப்படுபவர்தான் நடிகர் விஜய். உயரத்தில் கொடி பிடித்து பறக்கும் நடிகர்களுக்கு தான் அடுத்தடுத்து சர்ச்சையான நிகழ்வுகள் அரங்கேறி கொண்டு வருகிறது. அதிலும் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் குறித்து தனி நீதிபதிகள் புண்படும்படி பேசியிருந்தார். இதற்காக விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சூழ்நிலையில் மற்றும் ஒரு சொகுசு காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விஜய்க்கு அடுத்த அடியாக காணப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிஎம்டபிள்யூ காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது அதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விஜய் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்தால் அபராதம் விதித்து அதை எதிர்த்து விஜய் மனுதாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த கார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடுத்துள்ளார். 63 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூபாய் 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்த முதலில் மறுத்து பின் செலுத்தியுள்ளார்.
தாமத காலத்திற்கு அபராதமாக 400% விதித்து ரூபாய் 30.23 லட்சம் செலுத்த விஜய்க்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த அடிப்படையில் நடிகர் விஜய் அபராதம் விதிக்கப்பட்டது என ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
