தளபதி 69-ல் கிட்டத்தட்ட உறுதியான இயக்குநர்..? ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது தளபதி 68 தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் இந்தப் படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ளது. தளபதி விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் AI தொழில்நுட்பத்தில் கேப்டன் விஜயகாந்தும் ஒருகாட்சியில் இடம்பெற்றுள்ளார். இப்படி அனைவரையும் எதிர்பார்ப்பையும் எக்கச்சக்கமாக தூண்டி விட்டிருக்கும் தி கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றது.

வருகிற செப். 5-ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து தளபதி 69 படத்துடன் தனது நடிப்புத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியல் களத்தில் இயங்கப் போவதாக நடிகர் விஜய் கூறியதை அடுத்து தளபதி விஜய்யின் கடைசி படத்தினை இயக்குவது யார் என பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. அதில் ஏ.ஆர். முருகதாஸ், அட்லி, ஹெச். வினோத் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்னனி லிஸ்ட்-ல் இருந்த நிலையில் தற்போது ஹெச். வினோத் இயக்கப் போவதாக கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கங்குவா முதல் ரிவ்யூ கொடுத்த பாடலாசிரியர் விவேகா.. இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என புகழாரம்

சமூகக் கதைகளை கமர்ஷியலுடன் கலந்து சொல்வதில் கைதேர்ந்த இயக்குநரான ஹெச். வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களில் அஜீத்துடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார். இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த படம் இயக்கப் போவதாக தகவல்கள் வந்த நிலையில் அது இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கிடையே தளபதி 69 படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும், ஹீரோயினாக சமந்தா நடிக்கப் போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா விஜய்யுடன் ஏற்கனவே கத்தி, மெர்சல், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக மீண்டும் தளபதியுடன் ஜோடி சேரப் போகிறார் என்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews