
Entertainment
தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்… மீண்டும் அதே கூட்டணியில் விஜய்!!..
விஜய் தற்போது வம்சி இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஷூட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை நடக்கும் என கூறப்படுகிறது. முதல் 2022ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் 2023 ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தாலும் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டுவருகிறது.
தளபதி 68 படத்தின் டைரக்டர் யார் என்பதை இதுவரை உறுதியாகாத நிலையில் தளபதி படத்தின் டைரக்டர் யார் என்பது பற்றி பல தகவல்கள் பலரின் பெயர்கள் கூறப்படுவது. இதற்கு இடையில் தளபதி 68 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. தற்போது விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து உள்ளது. இந்நிலையில் தளபதி 68 பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே அறிவிக்கப்பட்டாலும் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு பணிகள் துவங்கப்படும். இப்படம் வித்தியாசமான கதை ஒன்றாக உருவாக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கிய அட்லீ இந்த படத்தை முடித்த பிறகு தளபதி விஜய் பற்றிய தகவல்கள் வெளிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் அட்லீ கூட்டணியில் பிகில்,மெர்சல்,தெறி என மூன்று படங்களை அடுத்து விஜய் அட்லீ இணையும் 4வது படும் ஆகும். அதே சமயம் மற்றொரு தகவலாக விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துருக்கிறார் எனவும் கூறப்படும் நிலையில் என்பது உறுதியான தகவல்கள் தெரியவில்லை. தபளபதி 68 அட்லீ தான் இயக்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிகில்,மெர்சல்,தெறி என மூன்று வெற்றி படங்களுக்கு பின்னர் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படம் ஆக்ஷன் படம் இல்லை என்றும் தளபதி 66 போலவே முழுக்க முழுக்க குடும்பம் மற்றும் காமெடி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அட்லீ இயக்கும் பாலிவுட் படத்திலும் விஜய் நடிக்க வைத்திருக்கிறாராம். ஆனால் அதில் விஜய் நடிக்கப் போவதில்லையாம் அதற்கு பதில் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட அதிக வாய்ப்பிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. விஜய்-அட்லீ இணையும் படத்தில் கமலும் நடிப்பாரா என்பது தெரியவில்லை ஆனால் இவர்கள் இணைந்தால் இந்திய சினிமாவிலும் என்பது மட்டும் உறுதி.
