அஜித் படத்திற்கு இணையாக தளபதி 68 திரைப்படத்தில் நடக்கும் சேஸிங் சண்டை காட்சி!

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பாடகராக அடியெடுத்து வைத்து வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் பாடிய துள்ளுவதோ இளமை படத்தில் இடம்பெற்ற நெருப்பு கூத்தடிக்கு எனும் பாடல் வேற லெவலில் ஹிட் கொடுத்திருந்தது. அதை தொடர்ந்து சினிமாவில் சில படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பின் இயக்குனராக அவதாரம் எடுத்த வெங்கட்பிரபு சென்னை 600028 எனும் திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் வெளியான பொழுது பல கேலி, கிண்டல் என சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி இன்றளவு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராகவும் மிகவும் ஸ்டைலிஷ் ஆன இயக்குனராகவும் வெங்கட் பிரபு வலம் வருகிறார். முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் மங்காத்தா எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அஜித்தின் 50 ஆவது திரைப்படம் ஆக வெளியாகிய மங்காத்தா வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு வெற்றி படியாக அமைந்தது.

இதற்கு அடுத்ததாக சமீபத்தில் மாநாடு எனும் மாபெரும் ஹிட் படத்தை இயக்கியிருந்தார். சிம்புவிற்கு கம்பேக் ஆக அமைந்த இந்த திரைப்படத்தில் எஸ். ஜே சூர்யா வில்லனாக களமிறங்கி படத்தை வேற லெவலில் உயர்த்தி இருப்பார். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜைகள் கடந்த மாதம் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள நிலையில் தாய்லாந்து படப்பிடிப்பில் ஒரு அதிரடியான சேஸிங் ஃபைட் காட்சிகள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்படியான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சண்டைக் காட்சிக்கு தளபதி விஜய் அவர்கள் தன் உயிரை பொருட்படுத்தாமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை தியேட்டரில் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட அசின்.. தட்டிப் பறித்த திரிஷா! எந்த படத்தில் தெரியுமா?

இந்த காட்சிகளை தியேட்டரில் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சண்டைக் காட்சிகளுக்கு பின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ் அகோரம் அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த சண்டை காட்சி சிறப்பாக வந்துள்ளதால் அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் விடுமுறை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...