தளபதி 67 படத்தின் வில்லன் லிஸ்ட் குறித்த மாஸ் அப்டேட்! படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

தளபதி விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போழுது ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிந்து படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.

vijay220522 3 1653216457 1653983439 1655966700

மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது. இவர்களது கூட்டணியில் முதலில் உருவான மாஸ்டர் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

vijay and samantha 1 1

இந்த நிலையில் தளபதி – 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 3 வில்லன்கள் இன்னும் தேர்வு செய்யாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு தயாரான ஹன்சிகா.. மாப்பிள்ளை யாருனு தெரிஞ்சா அசந்துருவீங்க?

தற்போது விஜய் 67வது படத்தின் லொகேஷன் பார்ப்பதற்கு லோகேஷ் கனகராஜ் மும்பைக்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. இப்படம் மும்பை பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment