அடி தூள்! தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாஸ்டர்’. இப்படம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய நிலையில் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

vijay

அதன் தொடர்ச்சியாக மீண்டும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளது. தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் சூழலில் தளபதி 67 படத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் தளபதி 67 படத்தின் பூஜை நடைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

thalapathi 67 1

அதே சமயம் ஸ்டூடியோவில் நடைப்பெற்ற தளபதி 67 பூஜையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதியில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் மூலம் தகவல் வெளியாகலாம் எனவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.