Connect with us

தளபதி 67 ஹீரோயின் யாரு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு..

thalapthy vijay

Entertainment

தளபதி 67 ஹீரோயின் யாரு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு..

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போழுது டைரக்டர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்கள் விஜய். ஸ்ரீ வெங்கடேஷ்வரா தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது.

thalapathy 66

சென்னையில் முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து ,இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அது முடிந்து மூன்றாம் கட்ட ஷுட்டிங்கும் துவங்கி நடந்து வருவதால் விஜய்யுடன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் பங்கேற்று நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.மேலும் இதுவரை ஒரு சீன் கூட எடுக்கப்படவில்லையாம். சென்னையில் அமையும் செட்டில் தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.தளபதி 66 படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயுள்ளார்.இந்நிலையில் தளபதி 66 படத்தைப்பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

samantha pic

இந்நிலையில் அடுத்து தளபதி 67 படத்திற்காக விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேரவுள்ளார். லோகேஷின் விக்ரம் படம் இன்று ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்து விஜய் 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

smantha 4

விஜய் 67 படத்தின் ஷூட்டிங் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க அனுக்கிருக்கிறார்கள். ஏற்கனவே சமந்தா விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது நான்காவது முறையாக விஜய்வுடன் ஜோடி சேர உள்ளார் சமந்தா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top