சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை விட ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது.
இந்நிலையில் தென்னிந்தியாவில் மிக அதிகமான ஃபாலோயர்ஸை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் உள்ளார்,அவரது ட்விட்டரில் தனது படம் தொடர்பான அப்டேட்டுகளை மட்டும் வெளியிடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய்க்கு ஃபேஸ்புக்கில் மட்டும் 78 லட்சம் ஃபாலோயர்களையும், ட்விட்டரில் 39 லட்சம் ஃபாலோயர்களையும் பெற்றிருக்கிறார். அப்படி இருக்க ஃபேஸ்புக்கில் கடைசியாக 2020 ஜனவரி 27ம்தேதி பதிவிட்டுள்ளார் விஜய்.
இறுதியாக ட்விட்டரில் தனது வாரிசு படத்தின் 3 போஸ்டர்களை விஜய் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விரைவில் விஜய் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதற்காக actorvijay என்ற ப்ரொஃபைல் உருவாக்கப்பட்டு ப்ரைவேட் மோடில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ போஸ்டரில் தவறா? என்ன நடந்தது!