தமிழ் திரையுலகில் தளபதி விஜய் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரள திரையுலகிலும் தளபதி விஜய் செய்த சாதனை குறித்த தகவல் தற்போது வந்துள்ளது
கேரளாவில் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 2 படங்கள் விஜய்யின் படங்கள் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது இதனையடுத்து தற்போது கேரளாவில் மோகன்லால் மற்றும் விஜய்க்கு இடையேதான் பாக்ஸ் ஆபீஸ் போட்டி இருப்பதாக அம்மாநில விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்
தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் விஜய்யின் படங்கள் முதல் நாளில் ரிலீஸாகும் போது பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகிறார்கள் என்பதும் இதனால் கேரளாவில் விஜய் படங்களில் அதிக வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விஜய் செய்த புதிய சாதனை வசூல் சாதனை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.