எதிர்பாராத செயலை செய்த விஜய்; புனித் ராஜ்குமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய தளபதி!
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நம் தமிழகத்தில் இருந்து சினிமா நட்சத்திரங்களும் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இருப்பினும் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்பது வேதனையான ஒன்றாக இருந்தது. இதனால் கர்நாடக ரசிகர்கள் தமிழக நடிகர்கள் மீது அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் தளபதி விஜய் இன்று நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. அதில் தளபதி விஜயுடன் கர்நாடகா VMI பிரசிடன்ட் ஏஎம் ராஜா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
