’தளபதி 68’ படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி: விஜய், அட்லிக்கு சம்பளம் எவ்வளவு?

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த 66வது திரைப்படமான ’வாரிசு’ வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 68வது படத்தை அட்லி இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு 150 கோடி சம்பளம் என்றும் அட்லிக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்துவரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை அட்லி இயக்கி வரும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அவர் தளபதி 68 படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...