Connect with us

‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

Entertainment

‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

3b3ce26feebe8169d5fc80e6e43e9422-2

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைபடம் ‘தளபதி 62’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது.

37466c21e4fbbb214d4b50acbce1060aஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும் ஜூன் 21ஆம் தேதி அதாவது விஜய்யின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம் வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சன் டிவியில் முதலில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top