முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவரும் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ‘தலைவி’ படத்தின் புதிய ஸ்டில்லை படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
Tribute to the legend #MGR on his birth anniversary,revolutionary leader n a mentor to #Thalaivi @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms #GothicEntertainment @Thalaivithefilm pic.twitter.com/S5dZoCuIr9
— Kangana Ranaut (@KanganaTeam) January 17, 2021