தலைவர் 171: சத்தியமா எல்சியூ கிடையாது..? அப்போ லியோ எல்சியூ தானே லோகி..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 ஆவது படம் கண்டிப்பாக எல்சியூ கிடையாது என ஆரம்பத்திலேயே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால், நடிகர் விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ இதுவரை எல்சியூவா இல்லையா என்பதை மட்டும் ரிவீல் செய்யவில்லை. இந்நிலையில், கண்டிப்பாக லியோ படத்தை எல்சியூ கனெக்ட்டில் தான் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருப்பார் என்றும் அதன் காரணமாகவே மறுப்பு தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

லியோ படத்துக்கு தனியாளாக புரமோஷன்:

மேலும், முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள் என்றும் கடைசி கிளைமாக்ஸில் ட்விஸ்ட் உள்ளதாகவும் பல பில்டப்களை தனி ஒருவனாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் பேசி வருகிறார்.

தயாரிப்பாளர்கள் லலித் குமார் லியோ படத்திற்கு எந்த மாநிலத்திலும் எந்தவொரு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை அடுத்த வாரம் லியோ திரைப்படம் திரைக்கு வருகிறதா என்று பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்திய ரசிகர்களுக்கே தெரியாது என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

தலைவர் 171 எல்சியூ இல்லை:

லியோ படத்தின் ரிலீசுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் முழுவதுமாக தலைவர் 171 வது படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் களம் இறங்குவார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த படம் எல்சியூ இல்லை என்றும் ரஜினிகாந்தை வைத்து புதிய முயற்சியில் படம் ஒன்றை உருவாக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தலைவர் 171 வது படத்தில் இணைவார் என்றும் மேலும் படத்தின் காஸ்டிங் வேற லெவலில் இருக்கும் என்றார்.

அப்போ லியோ எல்சியூ தானா?:

தலைவர் 121 வது படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் இடம்பெறவில்லை என்றால் கண்டிப்பாக நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை கடைசி நேரத்தில் எகிற விட்டு வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில் லியோ திரைப்படம் 600 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 400 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், லியோ, அடுத்ததாக அவர் இயக்கப் போகும் தலைவர் 171 என தொடர்ந்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் ஹிட் மெஷினாக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அதற்கு ஏற்ப தனது சம்பளத்தையும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews