
பொழுதுபோக்கு
மே 1ஆம் தேதி ஒரே நேரத்தில் வெளியாகும் தல-தளபதி திரைப்படம்…!
உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நம் தமிழகத்தில் மே 1ஆம் தேதி உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த விடுமுறை நாளில் மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் தொலைக்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இறுதியாக விடுமுறை நாளை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு பிரபல தொலைக்காட்சிகளும் திரைக்கு வந்த புதிய படங்களை வெளியிட்டு மக்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.
அந்த வகையில் மே 1ஆம் தேதி தமிழகத்தில் மக்களால் தல என்று அழைக்கப்படுகிற நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. மே 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
அதே நாள் மற்றும் அதே நேரத்தில் சன் டிவி மற்றும் ஒரு பிரபல நடிகரின் திரைப்படத்தை ஒளிபரப்புவதாக தெரிகிறது. அதன்படி மே 1 மாலை 06:30 மணிக்கு சன் டிவியில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தற்போது ரகளையில் ஈடுபட்ட தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
