Connect with us

சூரரைப் போற்று சூர்யாவுக்கு முன்னாடியே தல…..குழந்தைகளை இலவசமாக விமானத்தில் பயணிக்க வைத்த பெருமை!

suriya ajith

பொழுதுபோக்கு

சூரரைப் போற்று சூர்யாவுக்கு முன்னாடியே தல…..குழந்தைகளை இலவசமாக விமானத்தில் பயணிக்க வைத்த பெருமை!

சூரரைப் போற்று சூர்யாவுக்கு முன்னாடியே தல…..குழந்தைகளை இலவசமாக விமானத்தில் பயணிக்க வைத்த பெருமை!

சூர்யா சினிமா வாழ்க்கையிலேயே அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் எது என்றால் பலரும் கூறுவது சூரரைப்போற்று தான். இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் குறைந்த விலையில் பொதுமக்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையோடு போராடும் ஒருவரின் கதையாக காணப்படுகிறது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த சூழலில் சூரரைப்போற்று திரைப்படத்தில் இறுதியில் பொதுமக்கள் பலரும் விமானத்தில் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .அதோடு மட்டுமில்லாமல் சூரரைப்போற்று இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சூர்யா 100 குழந்தைகளை இலவசமாக விமானத்தில் பயணிக்க உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தற்போது உள்ள அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் சூர்யாவுக்கு முன்னதாகவே நடிகர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக 60 குழந்தைகளை விமானத்தில் இலவசமாக ஏற்றிச் சென்றார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று தான்.

அந்த நடிகர் தற்போது மக்களால் என்றும் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அஜித்குமார் தான். நடிகர் அஜித்குமார் 2000 ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி சுமார் 60 குழந்தைகளை இலவசமாக தனது சொந்த செலவில் விமானத்தில் பயணம் செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top