தல அஜித் பிறந்த நாள்: டுவிட்டரில் டிரெண்டிங்!

e6539e9bab6f56f25006d994bc080008

இன்று மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகம் உள்பட உலகம் முழுவதிலுமுள்ள அஜித் ரசிகர்கள் தல அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்

இந்த ஆண்டு தல அஜித்தின் 50வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு சிறப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று கோவில்களில் வழிபாடு முதியோர் இல்லங்களில் உணவு உடை உள்ளிட்ட சமூக சேவைகளை செய்து அஜித் ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்

bcce4f8b16da9fe58614f64afe5f9b21

மேலும் அஜித் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை 12 மணி முதலே அஜித் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறித்த ட்வீட்டுகள் டுவிட்டரில் பதிவு செய்ய தொடங்கி விட்டதை அடுத்து அஜித் பிறந்தநாள் காரணமாக டுவிட்டர் தளம் பரபரப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக அஜித் பிறந்த நாளின்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று தனது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.