அதிக சம்பளத்தில் தாய்லாந்தில் வேலை: மோசடியில் சிக்கிய 2 பேர் கைது..!!

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக தமிழக மீனவர்கள் கடத்திச்செல்லப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, தமிழகத்தில் இருக்க கூடிய இளைஞர்களை குறிவைத்து மோசடியில் முகவர்கள் ஈடுப்பட்டனர். இதற்காக 1 முதல் 2 லட்சம் வரையில் இளைஞர்களிடம் பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல்: அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!!

பின்னர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி சென்று சமூக விரோதிகளாக செயல்பட வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து 2 முகவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்…. நரபலிக்கு இரையான பத்மா…. வெளியான சிசிடிவி காட்சிகள்..!!!

அதன் படி, திருச்சியை சேர்ந்த கேர் கன்சல்டன்சி நிறுவனத்தின் முகவர்களான ஹானவால்,முபாரக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment