தை அமாவாசை 2022 முக்கியத்துவம்!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக மூன்றே மூன்று அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் போதும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவிக்கொண்டிருக்கிறது. அது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும்.

ஒரே ஒரு ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 6 ஆண்டுகளாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 12 ஆண்டுகளாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ஒரே ஒரு தை அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 18 ஆண்டுகளாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் கிடைக்கும்.

பிலவ வருடத்தின் தை அமாவாசை 31.1.2022 திங்கட் கிழமை மதியம் 1.44 முதல் 1.2. 2022 செவ்வாய் கிழமை காலை 11.54 வரை இருக்கிறது. தர்ப்பணம் அதிகாலை 5 மாணி முதல் மதியம் 2 மணிக்குள் செய்ய வேண்டும் என்று சாஸ்திர விதி இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் 1.2.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலையில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு விதமான துயரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. வருமான பற்றாக்குறை, வராத கடன், குடும்பத்தில் யாரும் யாருடைய பேச்சையும் மதிக்காமல் இருப்பது, ஒழுக்கமற்ற வாழ்க்கை, கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இருப்பது என இந்த துயரங்கள் முழுமையாக நீக்க வேண்டுமென்றால் தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவும் வீட்டில் தர்ப்பணம் செய்தால் போதுமானது. வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் தகுந்த பிராமணர்களை வைத்து தினசரி தர்ப்பணம் செய்யலாம். அது இயலாதவர்கள் தானாகவே தினமும் தர்ப்பனம் செய்யலாம்.

ஆனால் எப்படி தர்ப்பணம் செய்வது? யார் தர்ப்பணம் செய்வது? நமக்கு தர்ப்பணம் செய்யும் தகுதியும் அருகதையும் பொறுப்பும் உண்டா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கின்றது. சித்தர் பெருமக்கள் இவைகளுக்கு பல விளக்கங்கள் தந்துள்ளார்கள்.

நம்முடைய அப்பா, அம்மா மற்றும் தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு தெரியாமல் நாம் தர்ப்பணம் செய்யலாம். ஏனெனில் அவர்களில் பலருக்கு இதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் தெரியாமல் போய் விட்டது. ஆண் எனில் 18 வயது நிரம்பிய பிறகும் பெண் எனில் 21 வயதுக்கு பிறகும் தர்ப்பணம் செய்யலாம்.

நம்முடைய இறந்த முன்னோர்களாகிய பாட்டன், முப்பாட்டன் மற்றும் ரத்த உறவுகளில் யாராவது இயற்கையான முறையில் இறந்து இருந்தால் அவர்களுக்கு யார் வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம். பல குடும்பங்களில் ஆண் வாரிசுகள் இல்லாமல் மகளிர் மட்டும் அதாவது பெண் வாரிசுகள் மட்டும் உள்ளார்கள். அவர்கள் வெள்ளை எள் வைத்து தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 3 ஆண்டுகள் தினமும் வெறும் ஐந்து நிமிடங்களுக்கு தர்ப்பனம் செய்து வந்தால் இதுவரை இருந்து வந்த எல்லா குறைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைத்து விடும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.