தமிழகம் முழுவதும் நாளைய தினத்தில் துணிவு படம் வெளியாக இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதே போல் போனிகபூர் படத்தை தயாரித்து உள்ளார்.
இந்நிலையில் நாளை படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதே சமயம் துணிவு படத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காலை 4,7,8 மணி உள்ளிட்ட காட்சிகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
வாரிசு VS துணிவு: ஜன.13,13,15,16ம் தேதிகளில் சிறப்புக்காட்சிகள் ரத்து!
இதனை சாதமாக பயன்படுத்தி சிலர் திரையரங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே முன்னணி திரையரங்குகளை பயன்படுத்தி விற்பனையானது நடைப்பெற்று வருகிறது.
அதன் படி, ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து ட்வீட் மூலம் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. இது போன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.