கிராமத்து ஸ்டையில் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு சாப்பிடணும் ஆசையா? ரெசிபி இதோ!

கிராமத்து சமையல்னு சொன்னே காரசாரமான உணவு வகைகள் தான், அதிலும் சூடான சாத்திற்கு தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு சாப்பிடும் போது சொர்க்கம் தான். கிராமத்து ஸ்டையில் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு நாம்ம வீட்டுல செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

தட்டை பயறு-1/2 கப்

கத்திரிக்காய் – 2 அல்லது 3

தக்காளி-2

வெங்காயம்-1

உப்பு- சுவைக்கு ஏற்ப

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

புளி – சிறிய எலுமிச்சை அளவு

சாம்பார் மிளகாய் பொடி -2 தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு ,

தட்டிய பூண்டு – 3 பல்.

செய்முறை:

தட்டை பயரை முதலில் நன்கு வறுத்து கொள்ள வேண்டும் பின்பு தண்ணீர் சேர்த்து 3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதில் உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்ததும்  வெங்காயம், கறிவேப்பிலை, கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வீட்டுல தக்காளி நிறைய இருக்குதா.. நான்வெஜி டெஸ்ட்டுல தக்காளி காளான் பிரியாணி ரெசிபி!

தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இந்த நேரம் கறிவேப்பிலை சேர்த்தல் மனமாக இருக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews