துணிவு, வாரிசு படங்களை இணையத்தில் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களை இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2 படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இரண்டு படங்களும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பாதல் வாரிசு படத்தை 4,548 தளங்களிலும், துணிவு படத்தை 2,754 இணையத்தளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி 2 திரைப்படங்களையும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.