தமிழர்களின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிராமபுறங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற இருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு ஏற்பாடும் முழுமையாக நடைப்பெறாமல் உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.
மதிய உணவு திட்டத்தில் சிக்கன்: முதல்வர் அதிரடி!
இதன் காரணமாக வெளியூர்களில் இருந்த ஏராளமான காளைகள் அழைத்துவரப்பட்ட நிலையில் மீண்டும் சொந்த ஊர்களுக்கு கொண்டுச்செல்லும் நிலை உருவாகியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதே சமயம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த சூழலில் நாளை மறுநாள் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
a href=”https://tamilminutes.com/44-judges-in-3-days-central-government-supreme-court/”>3 நாட்களில் 44 நீதிபதிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி!
மேலும்,ஜல்லிக்கட்டு கமிட்டியின் கோரிக்கையை ஏற்று இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.