கொரோனா முன்னெச்சரிக்கை! ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு! பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து!!

ஒமைக்ரான் வைரஸ்ஸின் இருமாற்றம் அடைந்துள்ள வைரஸ் சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனாவின் தாயகமான சீனாவில் இதன் தாக்கம் பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் எனவும், கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

எம்மாடியோ!! ஒரு கிலோ மல்லிகைப்பூ 3,600 ரூபாயா?

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை அனைத்து மருத்துவ மனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதற்காக முகக் கவசம், தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.