
தமிழகம்
குரங்கு அம்மை நோய் அறிகுறி தென்பட்டாலே பரிசோதனை!!: அமைச்சர்
கடந்த சில வருடங்களாக உலக நாடுகளில் வேகமாக நோய் தொற்று பரவிக்கொண்டு வருகிறது. அதுவும் கொரோனா என்ற பெரும் நோய் இன்றளவும் உலக நாடுகளுக்கு மிகுந்த அச்சத்தை கொடுத்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை என்ற புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவுகிறது. இதற்கு சின்னம்மை நோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன.
மேலும் நம் தமிழகத்திலும் இந்த நோய் மெல்ல மெல்ல பரவலாம் என்றும் தெரிகிறது. குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் நிச்சயமாக தமிழகத்திலும் குரங்கு அம்மை நோய் பரப்பும் என்றும் தெரிகிறது.
இதனை தடுக்கும் விதமாக நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி குரங்கு அம்மை நோய் பரவிய பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் திரும்புகிறவர்களுக்கு அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வழக்கமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து தொற்று பரவும். ஆனால் குரங்கு அம்மை அங்கே இருந்து பரவவில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
