நியூசிலாந்தை வீழ்த்த தடுமாறிய இந்தியா! ரசிகர்கள் சோகம்; டிராவில் முடிந்த டெஸ்ட் மேட்ச்!!

இந்தியாவிற்கு மிக முக்கியமான எதிரியாக மாறியுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. ஏனென்றால் ஐசிசி பெஸ்ட் வேர்ல்டு கப் தொடரில் பலம்வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் வேர்ல்ட் கப் தட்டி தூக்கியது நியூசிலாந்து அணி.

இந்தியா நியூஸிலாந்து

அதோடு மட்டுமில்லாமல் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற t20 வேர்ல்டு கப் தொடரில் இந்தியா பெரும் ஏமாற்றத்தை தழுவியது. கடைசி நேரத்திலும் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது எதிர் பார்த்த போது நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்குள் செல்வது சென்றது.

இதனால் இந்தியா-நியூசிலாந்து இடையே கடும் மோதல் நிலவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது நியூசிலாந்து அணி. 3 டி20 தொடர்கள், மற்றும் 2 டெஸ்ட் தொடர்கள் உள்ள இந்த சீரிஸில் 3 க்கு 0 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா வென்றது.

தற்போது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கான்பூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

ஃபர்ஸ்ட் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஃபர்ஸ்ட்  இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி 5வது நாள் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இருந்ததால் இந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment