ஜம்முவில் பதற்றம்; இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து மீது தீவிரவாதிகள்-துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..!!!
பொதுவாக நம் எல்லை பகுதியில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை காணப்படும். ஏனென்றால் அப்போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டுதான் வரும். இதற்கு பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.
அந்த வகையில் இன்று காலை ஜம்முவில் பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. அதன்படி தற்போது வரை ஜம்முவில் அதிதீவிர துப்பாக்கி சண்டை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் இன்று காலை சிஐஎஸ்எப் வீரர்கள் 15 பேர் சென்ற பேருந்து மீது திடீரென்று தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் நம் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனவே ஜம்முவின் எல்லைப் பகுதியில் இன்னும் உயிரிழப்புகள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பதட்டமான சூழ்நிலை நிலையில் உள்ளனர்.
