Connect with us

“தீவிரவாதமே பெரும் சவால்!” பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் பயங்கரவாதம் தான்!!

News

“தீவிரவாதமே பெரும் சவால்!” பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் பயங்கரவாதம் தான்!!

0f13fd9406fc3543eab78ceda48537a1

தற்போது நம் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் நடைபெற்று இருக்கிறது. இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் தற்போது ஆப்கானிஸ்தானின் வரத்தும் தீவிரவாதத்தை உருவாக்கியதாக காணப்படுகிறது. இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில்  சில தகவல்களையும் கூறியுள்ளார். அதன்படி தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தை ஒழிக்க ஷாங்காய் கூட்டமைப்பு வழிவகை காண பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் தாஜிசிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.d0b1f378333db89cb7fb0b1b1f284072

காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் உரையாற்றிய மோடி பயங்கரவாதத்தில் குறித்து எச்சரித்தார். பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமே பயங்கரவாததான் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் மோடி.ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகள் பயங்கரவாததான்  முக்கிய சவால் என்பதை  நிரூபித்தாக உள்ளன என்று மோடி கூறியுள்ளார்.

அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சினைகளே தெற்காசியாவின் பெரும் சவால்கள் என்றும் அவர் கூறினார். சகிப்புத்தன்மையும் நிதான தன்மை இதுபோன்ற அமைப்புகள் அடங்கிய வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தெற்காசியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது அவசியம் என்றும் மோடி கூறியுள்ளார்.

இந்தவட்டார  இளைஞர்களுக்கு எளிமையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் மோடி கூறியுள்ளார். மத்திய ஆசிய நாடுகள் உடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது என்றும்  மோடி விளக்கமளித்தார். கருத்து பரிமாற்றம், வெளிப்படைத்தன்மை பங்கேற்பு ஆகிய அம்சங்களை கொண்ட உறவுகள் அமைய வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top