
செய்திகள்
சினிமா செட்டில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி!!!
கடந்த சில நாட்களாவே தீ விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையில் சினிமா செட்டில் எற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை அடுத்த அந்தேரி பகுதியில் சினிமா செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதே போல் மற்ற இடங்களுக்கு தீ மளமளவென பரவியதால் செட் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது நாசமானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். அப்போது தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருக்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
