Connect with us

சீனாவில் பயங்கர தீ விபத்து: வைரலாகும் வீடியோ!!

m0hua62 china skyscraper

செய்திகள்

சீனாவில் பயங்கர தீ விபத்து: வைரலாகும் வீடியோ!!

 

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் 42 மாடி  வானளாவிய கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டிடம் முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்  வானளாவிய  வளாகத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக  கூறப்படுகிறது.

அதே போல்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியான நிலையில் 25 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top