காதலித்ததால் கொன்றேன்! கொடூர தந்தை பரபரப்பு வாக்குமூலம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வரபிரசாத். இவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 2 மகள்களையும் வரபிரசாத் வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையில் மூத்த மகள் வரபிரசாத்தை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மக்களே உஷார்!! இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

இதனால் 2-வது மகளை நன்கு வளர்த்து தனது விருப்படி திருமணம் செய்துவைக்கலாம் என வரபிரசாத் நினைத்துள்ளார். அதே சமயம் 2-வது மகள் லிகிதா ஸ்ரீ இளைஞர் ஒருவரை காதலித்தாக தெரிகிறது.

இதனை அறிந்த வரபிரசாத் லிகிதா ஸ்ரீயை கண்டித்துள்ளார். இருப்பினும் லிகிதா காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் லிகிதாவை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! என்ன தெரியுமா?

அதோடு காதலித்து பிரிய முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து விட்டு வரப்பிரசாத் தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவாக இருக்கும் வரபிரசாரத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment