Connect with us

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: மாணவர்கள் உற்சாகம்!

News

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: மாணவர்கள் உற்சாகம்!

d5420e1b60cf99a8eede6a383611519a-1

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு சற்றுமுன் வெளியானதை அடுத்து மாணவர்கள் அதனை உற்சாகமாக பார்த்து வருகின்றனர்.

சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானதை அடுத்து இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.  www.cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுடைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 10, 12 வகுப்புகள் தேர்வுகள் ரத்தான நிலையில் முந்தைய தேர்வுகள் மற்றும் அகமதிப்பீடுகள் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் இந்த மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top