Connect with us

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை!

News

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை!

551014587555870816a187113b1dbfb0

தமிழகத்தில் எப்பொழுதும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெற்று முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிப்போனது. அதன் பின்னரும் தமிழகத்தில் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.1121666a58a73bb037cc30656818bf6f-2

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. மேலும் திமுக சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர் தற்போது சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை மறுநாள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வு கூட நடத்தப்படவில்லை.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்தும் நாளை மறுநாள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலமே தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கல்விக் கட்டணம் தொடர்பாக நாளை மறுநாள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top