Connect with us

தென்காசி தீண்டாமை விவகாரம்: வெளிவந்த “பகீர்” பின்னணி?

arrest

தமிழகம்

தென்காசி தீண்டாமை விவகாரம்: வெளிவந்த “பகீர்” பின்னணி?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாகுளம் தீண்டாமை கொடுமை வெளியான நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக பாஞ்சாகுளம் பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல்கள் நிலவி வருகிறது. குறிப்பாக ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற மறுத்து மற்றொரு சமூகத்தினர் பழிவாங்கவே இத்தகைய தீண்டாமை கொடுமை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கு விசாரணையானது நிலுவையில் உள்ளதால் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு மத்திய அரசு வேலைக்கு தேர்வாகியும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தின்பண்டங்களை பட்டியலின மாணவர்களுக்கு வழங்க மறுத்தாகவும், தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தீண்டாமை விவகாரம் தொடர்பாக 2  பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைக்கு சீல் வைத்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top