Connect with us

டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீடு-இன்று விசாரணை!

velumani

News

டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீடு-இன்று விசாரணை!

டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீடு-இன்று விசாரணை!

நேற்றைய தினம் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் வேலுமணி மேல்முறையீட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் டெண்டர் விவகாரத்தில் வேலுமணி செய்த முறைகேடுகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது.

இதனால் அவருக்கு எந்தவித விதிவிலக்கும் வழங்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அதன்படி எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. வேலுமணி தனது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாக வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அரப்போர் இயக்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

மனுவை ஏற்று எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது ஹை கோர்ட்.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எஸ்.பி.வேலுமணி முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top