மின்துறையை தனியார் மயமாக்கும் டெண்டர்- புதுவை அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

துச்சேரியில் மின்துறையை அம்மாநிலம் கவனித்து வருகிறது. இந்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் விடப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மின் துறை ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில் தனியார்மயமாக்க கடுமையான ஆட்சேயபனை செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல் டெண்டர் அவசர காலக்கட்டத்தில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பாஜக நிர்மலுக்கு ஐகோர்ட் செக்!!

இதனை தனியாருக்கு கொடுக்கும் போது விவசாயிகள், இலவச மின்சாரம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் மக்கள் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு புதுவை இளைஞர்களுகு வேலைவாய்ப்பு பரிபோகும் என்பதால் டெண்டரை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக மத்திய, புதுவை அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

தெலுங்கு தேச கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! சிசிடிவி காட்சி வெளியீடு!

மேலும், டெண்டரை இறுதி செய்யக்கூடாது என தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment