
செய்திகள்
இபிஎஸ் மீதான டெண்டர் வழக்கு: இன்று விசாரணை!!!
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதலமைச்சராக இபிஎஸ் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலை துறை ஒப்பந்தராக உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுகவின் அமைப்பு செயலாளராக ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார்.
இதில் 4,800 கோடி முறைகேடு நடைபெற்று இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
