Connect with us

இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

palaniswai

செய்திகள்

இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

இபிஎஸ்-க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்வு ஆனது இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் இபிஎஸ்-க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top