Connect with us

அதிமுக கூட்டணியில் தேமுதிக: பேச்சுவார்த்தையில் இழுபறி

Tamil Nadu

அதிமுக கூட்டணியில் தேமுதிக: பேச்சுவார்த்தையில் இழுபறி

4fccb41de518abe84a7270d1ef44832d

அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தேமுதிக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதம். ஆனால் 23 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது

e4aa0325c44f229b6b4472c72d6ab968

ஆனால் தேமுதிகவின் இந்த கருத்துக்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தேமுதிக அதிரடி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக 18 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக தயாராக இருப்பதாகவும் ஆனால் ராஜ்யசபா சீட் குறித்த பேச்சுக்கு இடமில்லை என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் ராஜ்யசபா தகுதி வேண்டும் என்பதில் பிடிவாதமாக தேமுதிக இருப்பதால் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top