கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது – ஐகோர்ட் அதிரடி!

கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக வெங்கட்ராமன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் தஞ்சை அடுத்த சந்தன நல்லூரில் உள்ள கோயிலை மூன்றாவது நபருக்கு வழங்கியது மட்டுமல்லாமல் கரையம் செய்து வைத்துள்ள ஆவணங்களை தாக்கல் செய்தார்.

பொங்கல் தொகுப்பில் அரசியல் தலையீடு இருக்காது.. அமைச்சர் சக்கரபாணி!

அப்போது பேசிய நீதிபதிகள் கோயில் நிலத்தை 3-ம் நபருக்கு கொடுக்க என்ன உரிமை உள்ளது? என மனுதாரருக்கு கேள்வி எழுனார். அதே போல் கோயில்களை பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடரும் நிலையில் கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆக்கிரமிப்புகளை முடக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். பின்னர் பேசிய மனுதாரர் தன்னுடைய சகோதரர் கோயில் நிலத்தை பெற்றத்தாகவும், இதனை திருப்பி கொடுக்க வலியுறுத்தியதாக கூறினார்.
மதிய உணவு திட்டத்தில் சிக்கன்: முதல்வர் அதிரடி!

இந்த ஆவணங்கள் உண்மையானது அல்ல என்று தெரிவித்தார். இது குறித்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.