வரும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களும் பொங்கல் பண்டிகை வருகிறது. பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கமே விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்ட காய்கறிகள், நெல், கடலை இது போல பொருட்களை வைத்து வணங்குவதேயாகும்.
அந்த ஊரில் குடிகொண்டுள்ள புகழ்பெற்ற கோவில்களிலோ அல்லது அருகாமையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களிலோ சென்று தங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயம் செழிக்க இறைவனை வணங்கி வருவது வழக்கமான விசயமாகும்.
இந்த முறை கொரோனா காரணமாக கோவில்கள் பொங்கலன்று நடை சாத்தப்படுவதால் இப்போதிருந்தே மக்கள் குவிய தொடங்கி இருக்கின்றனர்.
முக்கியமாக பழனி, திருச்செந்தூர், போன்ற கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது மேலும் தைப்பூசம் வேறு சேர்ந்து வருவதால் முருகன் சம்பந்தப்பட்ட தமிழ் நாடு அளவில் உள்ள பெரிய ஆலயங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பழனியில் தைப்பூச விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாகவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். எனவே மலைக்கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே வருவதற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.