தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் இருக்கிறது.
இதில் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், சமயபுரம்,பழனி, மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோவில்கள் நல்ல வருமானம் வரக்கூடிய கோவில்களாகவும் உள்ளன.
மேலும் பல உபகோவில்கள், சின்ன சின்ன கோவில்கள் என நிறைய உள்ளன.
பெரிய கோவில்களில் இருக்கும் வசதியை மேம்படுத்தவும் சிறு சிறு கோவில்களில் இன்னும் வசதியை மேம்படுத்தவும் முதல்வர் தலைமையில் ஒரு சிறப்புகுழு அமைக்கப்பட்டு அதில் முக்கிய ஆலோசகராகவும் துணை தலைவராகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இருப்பார் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.