துப்பாக்கி 2 விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்! தெறிக்கவிடும் அப்டேட்!

விஜய் தற்போழுது வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்க போவது உறுதியாகியுள்ளது.

அதை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குவார் என உறுதியாகியுள்ளது. தற்போழுது இயக்குனர் , பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ஷாரூக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

22 6332d2e92cdd2

சமீபத்தில் விஜய்யின் 68வது படத்தில் பிகிலின் அப்பா விஜய் ராயப்பனின் இளமை காலத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.இந்நிலையில் இந்த புதிய படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் அதுவும் பட்ஜெட் ரூ. 300 கோடி என்கின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக வரிசையில் விஜய்யின் 69 வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் மறைவு – திரையுலக பிரபலங்கள் இரங்கல்

maxresdefault 24

மேலும் சமீபத்திய பெட்டியில் துப்பாக்கி 2 படத்தில் விஜயக்கு வில்லனாக தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இருப்பதாகவும் அதற்கு இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவித்து உள்ளார்.ஆனால் இந்த படம் தொடங்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் அதுவரை காத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment