ஆந்திராவில் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பெரிய படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக திரையுலகில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், இயக்குனர்கள் ராஜமவுலி, கொரட்டாலா சிவா உள்ளிட்டோர் ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் நேற்று சென்றனர்.
இதனையடுத்து ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் இதற்காக தனி கமிட்டி போட வேண்டும் என ஆந்திர முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திரையுலகை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.
தற்சமயம் தெலுங்கு சினிமாவில் ஆச்சார்யா, ராதே ஷியாம், பீம்லா நாயக், ஆர்ஆர்ஆர், சர்க்காரு வாரி பட்டா, எஃப் 3 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது