
பொழுதுபோக்கு
அஜித் பட டைட்டிலுக்கு ஆசைப்படும் தெலுங்கு நடிகர்! யாருடைய படம் ! என்ன டைட்டில் தெரியுமா?
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ராஜெமளலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க , தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தின் வருகை இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்” என பெருமையாக கூறியிருந்தார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகஉள்ளது . இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
இதனால் படத்திற்கு தற்காலிகமாக ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டு இருந்தது. படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்திய படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஷங்கர் தற்போது இந்த படத்திற்கு சிட்டிசன் என தலைப்பு வைப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி. இயுள்ளது துகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ரசிகருக்கு கையால் கடிதம் எழுதி வாழ்த்து கூறிய அஜித்! வைரல் வீடியோ பதிவு!
இதே பெயரில் கடந்த 2001ம் ஆண்டு தமிழில் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் படம் வெளிவந்தது. படத்தில் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடித்துள்ளனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைபடத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்
