என்னப்பா சொல்றீங்க தங்கத்தோட விலை இவ்வளவு குறைஞ்சு போச்சா? ஒரே குஷியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே காணப்படுகிறது. நாம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை தினம்தோறும் அறிந்து கொண்டு வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4,513 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 104 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 112 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை வீழ்ச்சி வெளியிலும் தொடர்கிறது. அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 64.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் வந்ததும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment