என்னங்க சொல்றிங்க ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாயா? ஒரே நாள்ல இருமடங்கு விலை உயர்வா?

ஒவ்வொரு நாளும் அனைத்துப் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாளுக்கு நாள் மலர்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக மல்லிகை பூவின் விலை 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 மல்லிகை பூ

இவை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிலோ ஒன்றுக்கு 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் வரத்து குறைவு மற்றும் பண்டிகை கால தேவை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றையதினம் கிலோ ஒன்றுக்கு 2,000 ரூபாய் விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ஒரே நாளில் 2000 ரூபாய் அதிகரித்து 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று கிலோ ஒன்றுக்கு 1750 விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று கிலோ ஒன்றுக்கு 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகை உள்ள நிலையில் இவ்வாறு பூக்களின் விலை உயர்ந்துள்ளது பலருக்கும் சோகத்தை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment