சியோமியின் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் அறிமுகம்!!

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிக்கென தனிப் பயனர்களை கொண்டுள்ளது, தற்போது பயனர்களைக் கவரும் வகையில் சியோமி நிறுவனமானது எம்ஐ  டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவியினை 43 இன்ச் என்ற அளவில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் டிவியின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது.

டிஸ்ப்ளே: சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் டிவியானது 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஏ53 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 750MHz மாலி-450 MP3 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம், மற்றும் 8 ஜிபி மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: வைபை, ப்ளூடூத் 4.2, 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட் போன்றவற்றினையும், மேலும் \ 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD வசதியினையும் கொண்டுள்ளது.

From around the web