புதிய துறையில் காலடி எடுத்து வைக்கும் வாட்ஸ்-அப்: இந்திய பயனாளிகள் மகிழ்ச்சி!

 

உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 

பேஸ்புக் நிறுவனத்தின் கையில் வாட்ஸ்அப் வந்த பிறகு பல்வேறு வசதிகளை பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் பண பரிமாற்றம் செய்யவும் வாட்ஸ் அப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயனாளிகளுக்கு தர உள்ளது அதாவது இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளிலும் கால் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

whatsapp

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணபரிமாற்ற துறையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இதற்காக ஒரு சில வங்கிகளுடன் வாட்ஸ்அப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் வாட்ஸ்அப் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி மேலும் சில வங்கிகளின் அனுமதிக்காக அந்நிறுவனம் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பண பரிமாற்றத்தை அடுத்து ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் வாட்ஸ்அப் கால்வைக்க உள்ளது. விவசாயம் கல்வி உள்ளிட்ட துறைகளிலும் அடுத்த ஆண்டு கால்பதிக்க உள்ளதாக வாட்ஸ்அப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 

ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைப்படுவோர் குறைந்த விலையில் இன்சூரன்ஸ் பாலிசியை பெறும் வகையில் தாங்கள் திட்டம் உருவாகி இருப்பதாகவும் இது ஒரு இன்சூரன்ஸ் புரட்சியாக இருக்கும் என்றும் அந்த நிறுவனத்தினர் கூறிவருகின்றனர்

வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால் வைத்து வருவது அந்த துறைகளில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்

From around the web